திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார். நவ.30ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு திரவுபதி முர்மு, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் […]
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக முத்து காலிங்கன் கிருஷ்ணன் நியமனம். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி வகித்த முத்து காலிங்கன் கிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என மத்திய உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.