மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 : இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவு 2,424 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்கீழ், பல்வேறு பணிகளுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட் உள்ளிட்ட காலி இடங்களுக்கு அப்ரண்டிஸ் முறையில் ஆட்களை மத்திய ரயில்வே தேர்வு செய்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு (ஆர்ஆர்சி) அதிகாரப்பூர்வ இணையதளமான rrccr.com இணையதளத்தில் ஆகஸ்ட் 15வரை விண்ணப்பிக்கலாம். […]