பெட்ரோல் மற்றும் டீசல்,ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்..!
பெட்ரோல் மற்றும் டீசல்,ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால்,இதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக குஜராத் அரசு மற்றும் ஐ.ஓ.சி. இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று காந்திநகரில் நடைபெற்றது. அதில்,மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துக் கொண்டார். […]