30 வருட பணி அனுபவம் வைத்திருந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள், பணிக்கு சரியான வருகை பதிவு இல்லாதவர்கள் ஆகியோர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். மத்திய அரசானது ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் பணியில் சோம்பலுடன் இருக்கும் அதிகாரிகளை கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக இரண்டு IAS அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாம். அதாவது, 30 வருட […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரதான ரயில், விமானம், பேருந்து சேவைகள் முடக்கப்பட்டன. இதனால், ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு திருப்பி தர மத்திய அரசு ஏற்பாடு செய்ய்துவருகிறது. அதன்படி, ரயில் போக்குவரத்து முன்பதிவுகள் திருப்பி தரப்படுமென மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது விமான போக்குவரத்திற்கும் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை பயணிகளுக்கு எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பி தர வேண்டும் என மத்திய […]
சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்க்காக பல மரங்கள் அழிக்கப்பட்டன, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இன்று மத்திய அரசானது, ‘ சுற்றுசூழல் துறையில் இருந்து அனுமதி வழங்கப்பட்ட பிறகே, பணிகள் தொடங்கும். 8 வழிசாலைக்கு தடை விதிக்க முடியாது ‘ எனவும் பதில் அளித்தது.
காஷ்மீரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாலும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் வரகூடும் என உளவுத்துறை எச்சரித்ததன் பெயரிலும் காஷ்மீர் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். காஷ்மீர் பகுதியில் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே பணியர்மார்த்தபட்டுள்ளனர். கூடுதலாகா 20 ஆயிரம் வீரர்கள் அமர்நாத்யாத்திரையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கு தான் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இந்த வீரர்கள் தேர்தல் பணியின் போதும் பயன்படுத்தபடுவார்கள் […]