ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை […]
டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் டெங்கு பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் டெங்கு பரவல் உள்ளதால் டெல்லி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.