உத்தரப் பிரதேசம் : நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே, ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், நேற்று (ஜூன் 15) ஆன்லைன் டெலிவரி தளம் மூலம் தனது குழந்தைகளுக்கு ஒரு முக்கிய பிராண்டிலிருந்து ஐஸ்கிரீம் பெட்டியை ஆர்டர் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த ஐஸ்கிரீம் பெட்டியைத் […]