சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அழுதபடி அமர்ந்து கொண்டு இருந்தார்.இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு உதவ முன் வந்த சிலர் விசாரித்தபோது அந்த பெண் சேலத்தில் இருந்து திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்ததாகவும் , அவரின் கணவர் டிக்கெட் எடுத்து வருவதாக சொல்லி சென்றதாகவும் ஆனால் திரும்பி வராமல் விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து வந்த உதவி ஆய்வாளர் சத்யா […]
2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் ரூ.700 கோடி செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி, டெல்லி, சென்னை உட்பட 215 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பினை அடுத்து, நடப்பாண்டு இறுதிக்குள் […]
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.இதனால் டெல்லியில் இருந்து இயக்கப்படும் 10 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் 6 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த கடும் பனி மூட்டத்தால் சுமார் 30 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது மத்திய ரயில்வே நிர்வாகம்.