எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்டாக் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியை ஜூன் 21 வரை நீட்க்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை http://www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செண்டாக் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு நேற்று முதல் வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். அரசு மருத்துவக் கல்லூரியில் 106 எம்பிபிஎஸ் இடங்களும், 42 பி.ஏ.எம்.எஸ் இடங்களும், 29 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன என்றும் செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.