சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கோவை மாநகராட்சி சிமெண்ட் ஒப்பந்ததாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.