டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-இல் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய வரிச்சலுகைகள் […]
கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்கக் கோரிய தந்தை கோரிக்கை நிராகரிப்பு. கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை காவல்துறைக்கு பதில் வழக்கறிஞரிடம் ஒப்படைக்க உத்தரவிட இயலாது என்று மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் உயர்நீதிமன்றம். செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது, அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயார் என தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். மாணவியின் செல்போன் பெற்றுக்கொள்ள அரசு வழக்கறிஞர் மறுத்ததுடன், விசாரணை அதிகாரிகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக உள்ளதாக […]
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயில் […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது.அதன்படி,தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது. அதன்படி,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8,37,317 பேர் எழுதுகின்றனர்.மேலும்,தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில்,இன்று […]
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் எடுத்துவர தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, […]
இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க […]
நெல்லை மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய குப்பை சேகரிக்கும் பெண் தொழிலாளி ஒருவர் கீழே யாரோ ஒருவர் தவறவிட்டு இருந்த 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் கொண்ட பர்சை காவல்துறையினரிடம் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் நூறு ரூபாய் பணத்தைக் கூட நாம் தெருவில் தவறவிட்டாலும் பார்த்த உடனே எடுத்துச் செல்லக் கூடியவர்களும், ஏதோ ஒரு இடத்தில் கண் தெரியாமலோ அல்லது உதவியற்ற நிலையிலோ தவிக்கும் முதியவர்களிடம் இருந்து கூட மனசாட்சி […]
அதிகம் செல்போன் பயன்படுத்ததே என தாய் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போதைய நவீன காலகட்டத்தில் பிறந்து 5 மாதங்கள் கூட ஆகாத பச்சிளங்குழந்தையும் போன் இருந்தால் தான் சாப்பிடுகிறது. அதுவும் சாதாரணமாக அல்ல ஆண்ட்ராய்டு போன் கேட்டு அடம் பிடிக்கிறார்கள். சிறு வயதிலேயே மாணவர்கள் படிப்பில் செலுத்தக்கூடிய கவனம் முழுவதையும் போனில் தான் செலுத்துகிறார்கள். இதனால் பல விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. கடலூரில் உள்ள புருஷோத்தமன் எனும் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது மனைவி […]
மாணவர்களுக்கு இலவசமாக செல்போன் வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியர். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கை தொடங்கியது. பஸ் வசதியில்லாத இக்கிராமத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் […]
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கு சூப்பர் டிப்ஸ். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தலைவலி என்று கூறுவதுண்டு. அதிலும் சிலருக்கு ஒற்றைத்தலைவலி இருப்பது வழக்கம். அந்த வகையில், வெயில் காலங்களில் இது அதிகமாக ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், இந்த தலைவலியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் எனபது பற்றி பார்ப்போம். தண்ணீர் நாம் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்றரை லீட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நமது உடலில் நீர்சத்து குறையும் பட்சத்தில், […]
கிராமப்புறங்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதளத்தை பயன்படுத்துவதாக ஐ.ஆர்.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, இந்தியாவில் மொத்தம் 135.26 கோடி மக்கள் வசிக்கின்றனர். அதில் 50.4 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இதில் நகர்புறத்தில் வசிக்கும் மக்கள் இணையத்தில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர். இந்நிலையில், 2019 நவம்பர்க்குள் புதிதாய் 2.6 கோடி பெண் இணைய பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் பயனர்கள் 9 சதவீதமே உயர்ந்திருக்கும் நிலையில், […]
சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதில் அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இந்த செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு ஆபாச வீடியோக்கள் தான் காரணம் என்பதால் வீடியோக்கள் பார்ப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
அமெரிக்காவில் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் அதில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், உபயோகப்படுத்துவதும், சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமாக விதிக்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் செல்போன் இல்லையென்றால் பைத்தியம் பிடித்தது போல் காணப்படுவார்கள். சிறு குழந்தைகள் கூட செல்போன் இருந்தால் தான் சாப்பிடவே […]
இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல் நம்பர் அவசியம். அந்த நம்பருக்கு வரும் ஓடிபி வைத்து மட்டுமே இனி ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க முடியும். இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியாக எஸ்.பி.ஐ. உள்ளது. இந்நிலையில் எஸ்.பி.ஐ. பேங்க் ஏ.டி.எம்.களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதாவது […]
வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை மையப்படுத்தி ஒரு போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என போர்டு வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விளைச்சல் பரப்பளவு ககுறைவு உள்ளிட்ட சில காரணங்களால் இங்கு இந்தியாவில் வெங்காய உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால், வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தை நெட்டிசன்கள் நூதனமாக […]
குளியல் தொட்டியில் குளிக்கும் பொது, சார்ஜ் செய்து வைத்த செல்போன் விழுந்ததால், ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த எல்ஜினியா என்ற பெண். இவர் சம்பவத்தன்று, தனது கைபேசியுடன் குளியலறைக்கு சென்றுள்ளார். குளியல் தொட்டிக்கு அருகில் உள்ள மின் இணைப்பில் தனது கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு, குளிக்க தொட்டிக்குள் இறங்கினார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரின் கைபேசி தவறி தொட்டிக்குள் விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். எல்ஜினியாவின் இறப்பு, அந்த […]
குரூப் -4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதில் மொத்தம் 6,491 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்வை சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத செல்வோர் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் கொண்டு செல்லக்கூடாது. இந்நிலையில் வேலூரில் தேர்வறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக இரு இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர் . வேலூர் மாவட்ட ஆட்சியர் மஞ்சுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் […]
ஆரணியில் குடும்பத்தகராறு காரணமாக 300 அடி செல்போன் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏத்துவாபட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ்.இந்நிலையில் ரமேஷுக்கும் அவரது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில்ரமேஷ் அந்த ஊரில் உள்ள 300 அடி செல்போன் கோபுரத்தில் ஏறிய ரமேஷ் கீழே விழுந்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து ரமேஷின் உறவினர்கள் காவல்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் […]