சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது, செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது என சாலை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு செய்வதினால், சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. ஆனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை […]
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், […]
இஸ்ரேலின் என்எஸ்ஓ(NSO) என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக,இந்த ஸ்பைவேர்,மொபைல் போன்கள் அல்லது பிற சாதனங்களுக்குள் ஊடுருவி உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தரவுகளை சேகரித்து உளவு பார்க்க முடியும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,ஸ்பெயினின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,பிரதமர் பெட்ரோ சான்செஸின் மொபைல் […]
முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் அறிமுகம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனைத்து சான்றிதழ்களும் செல்போன் மூலம் பெரும் வசதியை இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வருவோம் என அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறேன். சாதிச் சான்றிதழை […]
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பின் ஒருவரது செல்போன் காணாமல் போயுள்ளது. 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த போனை கூட்டத்திலிருந்த நண்பனே திருடியதால் அதைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவன் திருப்பித் தர மறுத்ததால் மூன்று பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டே சென்று கிணற்றில் விழுந்த இளைஞர் மறுநாள் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்.பணி முடிந்த பின் இரவு நேரங்களில்,தான் பணிபரியும் நூற்பாலை அருகில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு அருகே சென்று காதலியுடன் செல்போனில் பேசி வந்தார். இந்த நிலையில்,வெளிச்சம் மற்றும் சுற்றுசுவர் இல்லாத கிணற்றுப்பகுதி அருகே காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆசிக், எதிர்பாராதவிதமாக […]
ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தவே கூடாது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்றும், இவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது காட்டுவதற்காக இவற்றை கடைபிடிக்க வேண்டு […]
சாலையில் செல்லும்போது செல்போனை மட்டுமே பார்த்து நடப்பவர்களுக்கு பயனளிக்கும் விதமாக,கண் போன்ற ஒரு கருவியை, தென்கொரிய தொழில்துறை வடிவமைப்பாளரான பாங் மின்-வூக் என்பவர் உருவாக்கியுள்ளார். உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு அதிகரித்து வருகிறது.இதனால்,மக்கள் பலர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர். அதுமட்டுமல்லாமல்,சாலைகளில் நடக்கும்போது கூட செல்போனை மட்டுமே பார்த்துக்கொண்டு நடக்கின்றனர்.இதன்காரணமாக, விபத்துகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில்,தென் கொரியாவை சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளரான பான்பின் ஹூக் என்பவர்,சாலைகளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும் வகையில்,மனிதனின் கண்ணைப் போன்ற […]
தண்டனை கைதிகளின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை கிடைத்துள்ளது. சிறையில் கைதிகளின் அறையிலும், கைதிகளிடமும் அவ்வப்போது சோதனை நடத்தி ஏதேனும் முறைகேடாக விதிகளை மீறி கொண்டுவரப்பட்டதா என சோதனை செய்வது வழக்கம். அப்படி, புதுசேரி, காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் சோதனை நடைபெற்றது. அப்போது தண்டனை கைதிகளிடமும், அவர்களின் அறையிலும் சோதனை நடைபெற்றது. அவர்களின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில மறைத்துவைக்கப்பட்ட செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் […]
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தை சார்ந்த ரத்தினம்(65).அதே பகுதியே சார்ந்த பிரகாஷ் என்ற இரண்டு இளைஞர்கள் ரத்தினத்தின் வீட்டின் அருகே வந்து அடிக்கடி போன் பேசி உள்ளனர்.இதை பார்த்த ரத்தினம் இனிமேல் இங்கு வந்து போன் பேசாதீர்கள் என தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த அந்த இரண்டு இளைஞர் ரத்தினத்தை கீழே தள்ளி உள்ளனர்.இந்த சம்பவத்தில் ரத்தினம் உயிர் இழந்தார்.இதை தொடர்ந்து ரத்தினத்தின் மகன் ராமு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு […]
தொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். ஜெர்மனி, ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரின் செல்போன்களே முக்கியம் என குழந்தைகள் பராமரிப்பை விட செல்போனே முக்கியம் என இருந்த பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியது உலகளவில் வைரலாகப்பட்ட செய்தியாகியுள்ளது. போராட்டத்தில் “நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக’ என்ற கோஷங்களை போட்டுக் கொண்டு 7 வயதுடைய குழந்தைகள் போராட்டம் நடத்தினர்.உங்களை எதிர்த்து நாங்கள் போராடுவோம் உங்களுக்கு நாங்கள் முக்கியமில்லை […]
சென்னை உயர்நீதிமன்றம் செல்போன் கதிர் வீச்சு உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதோ இல்லையோ செல்ஃபோன்கள் குடும்பத்தினரிடையே பிரிவை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் அன்னூரில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தை அகற்றும் பேரூராட்சியின் உத்தரவுக்கு எதிராக இண்டஸ் டவர்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த நிறுவனம் கோபுரம் அமைக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்காவிட்டால் அனைத்து ஆவணங்களுடன் ஒரு மாதத்தில் விண்ணப்பிக்கவும், அதனை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கவும் உத்தரவிட்டனர். கர்ணனின் கவச குண்டலம் போல […]