ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டரை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகள் இடையிலான 6-வது சீசன் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் 4-வது […]