கொலராடோ : அமெரிக்காவில் McDonald’s Quarter Pounders சாண்ட்விச் சாப்பிட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் E. coli பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. கொலராடோவில் பிரபல உணவகமான McDonald’s Quarter Pounders-ல் சாண்ட்விச் சாப்பிட்டு இதுவரை 10 மாகாணங்களிலிருந்து குறைந்தபட்சம் 49 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நோய் பரவலை தடுக்க, அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உணவு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த உணவில் பதப்படுத்தப்பட்ட வெங்காயம் மற்றும் மாட்டிறைச்சியால் இது ஏற்பட்டிருக்கலாம் […]
பீகாரின் சாப்ராவில் கள்ள சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது என தகவல். பீகார் மாநிலம் சாப்ரா மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் கள்ள சாராயத்தை (hooch) அருந்தியதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கள்ள சாராயத்தை அருந்தி அப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட மற்றவர்களை அடையாளம் காண காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் […]
முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா மூலம் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) வெளியிட்ட மூன்று புதிய ஆவணங்களில் ஒன்றன் முடிவு வெளிவந்துள்ளது. இதில் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் கொரோனா நோயால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவாகவும், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 10 மடங்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
முழுமையாக தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்லலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உகான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அங்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தி, அமரிக்காவை மோசமாக தாக்கியது. பின்னர் கொரோனா பரவல் சிறிது குறைந்த நிலையில், அமெரிக்காவில் வேகமாக பரவியது. தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 32,927,091 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 587,384 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 25,521,913 பேர் பதிப்பில் […]