ஓட்டல்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு தள்ளுபடி. அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிசிடிவி பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் நடராஜன் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்தியது. இதில் 12 சதவீதத்திற்கு மேலான உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படவில்லை […]
ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என UGC உத்தரவு. ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. ராகிங்கிற்கு எதிரான […]
பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இன்று காலை போக்குவரதுரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் கேமரா பொருத்தப்படும் என்றும் பேருந்து வழித்தடங்களை மக்கள் அறிந்துகொள்ள […]