தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் சில பதிவுகள் கிடைத்துள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்டது. இதனை தொழில்நுட்பம் மூலமாக […]