10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட்டு,அவை செயல்பாட்டில் இருக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் காவலர் பணியில் இருக்க வேண்டும் எனவும்,இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம்,பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முதன்மை கண்காணிப்பாளராக இருக்க கூடாது எனவும்,தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களை நியமித்துக் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,சென்னையில் 5,794 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி,ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட […]
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு 2 ஆண்டுகள் பொதுநல வழக்கு தொடர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், லஞ்சம் வாங்க கூடாது என பெயர்ப்பலகை வைக்கவும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில், ஊழல் குற்றசாட்டுகளுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பொதுநல வழக்கு முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், […]
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் 2100 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்தாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர் தெரிவித்திருந்தார். தற்பொழுதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர். நிர்பயா திட்டத்தின் கீழ் 2100 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் படி ஒரு பேருந்தில் […]
நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நீர்நிலைகளில் CCTV கேமரா அமைக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கடற்கரைகள், அருவிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், 24 மணி நேரமும் நீச்சலில் திறமை பெற்ற பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் என கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு […]
நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல் மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் கொரோனா பரவலுக்கு முன்பு […]
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான புகார்கள்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால்,பள்ளிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். […]
13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை மதியம் 12.30க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக 10 வழக்கறிஞர்கள் முறையிட்டதால் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவுவிட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் […]