காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் (107) வயது மூப்பின் காரணமாக காலமானார். காளியண்ண கவுண்டர் 27-வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திருச்செங்கோட்டை சார்ந்த காளியண்ண கவுண்டர் எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி பதவிகளை வகித்தவர் ஆவார். காளியண்ண கவுண்டர் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, காமராஜர் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 200 அரசுப் […]
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானது. இந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 பெற்றார். இதையடுத்து 1,37,950 […]
கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் இன்று சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் மும்பையின் வடக்கு பகுதியில் போட்டியிட்டவர் பிரபல இந்தி நடிகையான ஊர்மிளா மடோன்கர் . அதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அதிலிருந்து வெளியேறினார் . தற்போது இவர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார் .இன்று உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் ஊர்மிளா இணைந்துள்ளார் .மேலும் ஊர்மிளா உள்ளிட்ட […]
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், புதுச்சேரி, மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளனர். நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி நீதிமன்றத்தை நாடுவது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி […]
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாககாங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை […]
கொரோனா வைரஸ், சீனா எல்லை பிரச்சனை , ராஜஸ்தான் அரசியல் தொடர்பாக காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையிலான கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை குறிவைத்து “இன்று யார் கடமையில் உள்ளனர்” என்று கேள்வி எழுப்பி “வீட்டிலிருந்து பி.ஜே.பி வேலை ” என பல்வேறு மத்திய அமைச்சர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. Who’s on duty today? pic.twitter.com/FBqhY8SgW4 — […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆங்கில செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட்டில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளது. BJP has institutionalised lies. 1. Covid19 by restricting testing and misreporting deaths. 2. GDP by using a new […]
துணை முதல்வர் பதவியிலிருந்து தூக்கப்பட்ட சச்சின் பைலட் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு ராஜஸ்தான் சட்டசபை சபாநாயர் சி.பி.ஜோஷி, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்து வந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். மேலும் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டு உள்ளார்.இதனால் […]