இன்று வெளியிடப்பட்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போர்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக பதிவாகியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 1,34,797 மாணவர்கள் 90 சதவீதம் மற்றும் 33,432 மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு, 2வது பருவத் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் ஆகஸ்ட் 23 முதல் […]
சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் -டிசம்பர் மாதத்திலும், 2-ஆம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் […]
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாள்தோறும் காரணம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மே மாதம் நடக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கக்கோரி பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. சிபிஎஸ்சி […]
சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படலாம் என கூறுகின்றனர். இந்நிலையில், டெல்லியில் 6 லட்சம் மாணவ-மாணவிகள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுத உள்ளனர். […]
சிபிஎஸ்சி தேர்வானது ரம்ஜான் திருநாள் அன்று நடப்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும். சிபிஎஸ்சி இயக்குனருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா விதி முறைகளை கையாண்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய கல்வித் […]
அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களை பெற பிரச்சாரம் நடத்தப்படும். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை 2021 ஆம் ஆண்டில், வளர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில், எப்படி, எப்போது நடத்துவது என கருத்துக்களை பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொகரியல் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், […]
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 99.28% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதலிடத்திலும், 98.95% தேர்ச்சி பெற்று சென்னை இரண்டாவது இடத்திலும், 98.23% தேர்ச்சி பெற்று பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இந்த […]
சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் + 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை மாதம் […]
கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் டெல்லி வன்முறை எதிரொலியாக பிப்ரவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த 10 மற்றும் 12 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 13 மாணவ, மாணவியர்கள் முதலிடம் பிடித்தனர். பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 29 தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 27 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் .தமிழகத்தில் மட்டும் 25000 மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் நேற்று சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதேபோல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் […]
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.நாடு முழுவதும் 31 லட்சம் மாணவர்கள் தேர்வுகள் எழுதினர். கடந்த ஏப்ரல் 4 -ம் தேதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தது. இந்த தேர்வில் 83.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா , கரிஷ்மா அரோரா ஆகிய மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.4% , […]