வருகின்ற மே 26 முதல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ,நிரந்தரக் கணக்கு எண் (பான்) அல்லது அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது. பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில்,மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) வருமான வரி விதிகளில் இத்தகைய […]
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைக் மார்ச் 15 வரை நீட்டித்தது மத்திய அரசு. 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அரசிவித்துள்ளது. வருமான வரித் துறையும் இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் காரணமாக வரி செலுத்துவோர்/பங்குதாரர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இ-பைலிங் […]
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30, 2021 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு, […]
மத்திய அரசு இந்த நிதியாண்டு முதல் பிஎஃப் கணக்குகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த நிதியாண்டு முதல் இரண்டு பிஎஃப் கணக்குகளை திறந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டரை லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள பிஎஃப் பங்களிப்புக்கு கிடைக்கக்கூடிய வட்டிக்கு வரி விதிக்கப்படுவதாக 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2.5 லட்சத்துக்கு அதிகமாக பிஎஃப் செலுத்துவோர் வரிக்குட்பட்ட பங்களிப்பு, வரிக்குட்படாத […]