போக்குவரத்து துறை நியமன முறைகேடு புகார் தொடர்பாக செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல். போக்குவரத்து துறையில் நியமன முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இருவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், கேவியட் மனு தாக்கல். அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கட்சி சார்பில் புதிதாய் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக தலைமை நிலை செயலகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]