மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு புதிய மனு. மேகதாது அணை விவகாரத்தில் விவாசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக […]
ஒரே நதிநீர் தீர்ப்பாயம் தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.இந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒரே தீர்ப்பாயம் வரும் பட்சத்தில் நீண்ட காலம் போராடிப் பெறப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும் .நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என்று […]