டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை கூடுகிறது. அதன்படி, நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே ஹெல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று நடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அடுத்த 16 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்ககாவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நாளை டெல்லியில் […]
கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் 9ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரை பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் மெளனமாய் சட்டத்தின்கீழ் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் […]
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பின்னர் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.