கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கின் இறுதீத் தீர்ப்பில் ஸ்கீம் என குறிப்பிடப்பட்டிருப்பது, காவிரி மேலாண்மை வாரியம்தான் என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, ஸ்கீம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை, மத்திய அரசு டிக்ஸ்னரியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் போட்டி பெரும் எதிர்ப்புக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே நேற்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பலத்த எதிர்ப்பை மீறி போட்டி நடைபெற்றதால் சென்னையில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்கு நடுவே பார்வையார்கள் போல் கலந்து கொண்ட […]