மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்

மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக எஸ்.மசூத் உசேன் பதவி வகித்து வந்தார்.மசூத் உசேனின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்கு சரியான தீர்வு என்ன?

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் பிரிப்பினை குறித்து பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது; இந்த பிரச்சனை குறித்த விரிவான அலசலை முந்தைய பதிப்பில் படித்து அறிந்தோம். இந்த பதிப்பில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்கு சரியான தீர்வு என்ன என்பது பற்றி படித்து அறியலாம். காவிரி மேலாண்மை வாரியம் 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டபடி, காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. … Read more