தஞ்சையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் படுத்து உறங்கும் போராட்டம்

தஞ்சையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் படுத்து உறங்கும் போராட்டம் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் படுத்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்;தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்ன..??

ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை … Read more

நாடாளுமன்ற இரு அவைகளில் எதிர்கட்சிகள் தொடர் அமளி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் சிக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி, கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சமீபத்தில் மத்தியில் ஆளும் தே.ஜ கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியும், ஆந்திர மாநில எதிர்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தற்போது போராடி வருகிறது. அதேநேரம் தமிழக மக்களுக்குக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் … Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் போராட்டம்.. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் போராட்டம்..   மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்கவேண்டும் என்கிற … Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு முழு ஆதரவு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மேலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள் சரியான பாதையில் செல்கின்றனர் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் புதிய திட்டத்தை ட்விட்டரில் விமர்சித்த திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்…!!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு,தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு காவிரிப்படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் அனுமதியளிக்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழக  விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு போராட்டக் களத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என அவர் … Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் 4 ஆவது நாளாக அதிமுக எம்.பிக்கள் டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதற்கு முன்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது டெல்லியில் அதிமுக எம்.பிக்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் 4 ஆவது நாளாக போராட்டம் நடத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.