கர்நாடகா: காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கடந்த வாரம் வரையில் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வந்தது. காவிரி ஒழுங்காற்று வாரியம் தினம் ஒரு டிஎம்சி வீதம் இம்மாதம் முழுக்க வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து ஒருநாளைக்கு வெறும் 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படும் என அம்மாநில அரசு கூறியிருந்தது. இப்படியான சூழலில் தான் கடந்த வாரம் முதல் காவிரி நீர்ப்பிடிப்பு […]
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது. டெல்லியில்இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனமழை… 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! இந்த கூட்டம் காவிரி […]
இந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றான காவிரி கர்நாடகா மாநிலத்தின் கோடகு மாவட்டத்தில் உள்ள தலகாவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகி ஹசான், மாண்டியா, மைசூர் போன்ற கர்நாடக மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது; தமிழ்நாட்டின் தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மற்றும் பிற தமிழக மாவட்டங்களில் பாய்ந்தோடுகிறது காவிரி ஆறு. 765 கிலோமீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆறு தமிழகம் மற்றும் கார்நாடக மாநிலங்களில் பாய்ந்தோடுவதோடு, காவிரியும் அதன் துணை […]
மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இக்கூட்டம் கட்சிகளையும், இயக்கங்களையும் கடந்து காவிரி நீர் குறித்த நேர்மையான அக்கறையும், உண்மையான உணர்வும், தெளிவான திட்டங்களும் கொண்டுள்ள விவசாயிகள், வல்லுனர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கான ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்திடும் […]
தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் சர்ச் அருகிலிருந்து பிராட்வே வரையிலும், சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கின் இறுதீத் தீர்ப்பில் ஸ்கீம் என குறிப்பிடப்பட்டிருப்பது, காவிரி மேலாண்மை வாரியம்தான் என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, ஸ்கீம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை, மத்திய அரசு டிக்ஸ்னரியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, ஆயுள் முழுவதும் சிறைசெல்லக்கூட தாம் தயாராக இருப்பதாக, தெரிவித்திருக்கிறார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்புவில் இருந்து சனிக்கிழமை தொடங்கினார். இரண்டாவது நாளான நேற்று, தஞ்சாவூர் சில்லத்தூரில் அவர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். காவிரிக்காக போராடிய தங்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டது குறித்து அஞ்சவில்லை என்றும், காவிரிக்காகப் போராடி ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் […]
ஓசூரில் நாம் தமிழர் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் மாநில எல்லை முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் லால் (( LAL )) பேருந்து நிறுத்தத்திலிருந்து இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். கர்நாடக – தமிழக எல்லையை முற்றுகையிடும் நோக்கில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் தல அஜித். பொதுவாக அஜித் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படியிருந்தும் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற பிரச்சனைகளில் நடிகர் சங்கம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டார். அதேபோல் இன்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நடந்த போராட்டத்திலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் கலந்து கொள்ளவில்லை. இது […]
தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா, விஜய், அஜித், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே நாசர் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், […]
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.