டெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் வரும் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புது வை மாநில அதி காரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது. காவிரியில் இருந்து […]
காவிரி நீர் சர்ச்சை : தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்பதில் கர்நாடகா இருந்த நிலையில், தற்போது தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து கொண்டே தான் வருகிறது. இதற்கு ஒரு தீர்வை கொண்டுவரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது […]
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
பிப்ரவரி 1-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு மூன்று மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. இருப்பினும், கடந்த 18ம் தேதி […]
டெல்லியில் நாளை மறுநாள் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு,கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார் கடந்த 3-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 2,600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 3-ம் தேதி கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா..? என கணக்கீடு செய்யப்படும் என […]
காவிரி நீர் விவகாரத்தில் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழக அரசுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 13ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தண்ணீரை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரையில் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை திறந்து விடவில்லை. காவிரி ஒழுங்காற்று […]
காவிரி நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக முடிவுகள் எடுக்க காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாடு, கர்நாடகா , கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில நீர்வளத்துறை நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கும். அதன்படி, காவிரி நதியின் நீர்மட்டம் மற்றும் மழையின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்து, எந்த அளவிற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை வெளியிடும். இந்த பரிந்துரைகளை […]
காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை அம்மாநில அரசு தராமல் இருந்து வருகிறது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. இருப்பினும், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து […]
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை கடந்த சில மாதங்களாகவே அம்மாநில அரசு தராமல் இருந்து வருகிறது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட […]
இந்த வருடம் பருவமழையானது போதிய அளவில் பெய்யாத காரணத்தால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 31 அடியாக சரிவடைந்து, அணையில் வெறும் 8 TMC அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் சம்பா, தாளடி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குடிநீர் […]
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இந்த விவகாரமானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய அமைப்புகளிடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று […]
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கான தடை நீட்டிப்பு. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து தமிழக அரசு தொடர்ந்த வழக்க்கில் விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அமர்வில் மேகதாது அணை விவகாரம் […]
ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின்படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தகவல். காவிரி ஆற்றில் மருத்துவக்கழிவு, பூச்சிக்கொல்லி, உலோக கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். காவிரியில் மருத்துவ மாசு அதிகமுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மாதிரிகளை சேகரித்துள்ளனர். காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவிரி […]
தமிழகத்தின் அடையாளமான திகழும் நம் காவிரி மாசுபடுவதை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி ட்வீட். திமுக மகளிர் அணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், காவிரி ஆறு, மருந்து கழிவுகளாலும், ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், பூச்சி கொல்லிகளாலும், மிகவும் மாசு பட்டிருப்பதாகத் ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து கழிவு, ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றால் காவிரி மாசுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. […]
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும்.மத்திய அரசு இதைச் […]
திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போராட்டம் நடத்தப்பட போராட்டம் தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு […]
கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் காவிரி நீர் வரத்து அதிகரிக்கும் என ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவுக்குள் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி எட்டும் என ஜல்சக்தி அமைச்சரகம் கூறியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை முழு கொள்ளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் கிருஷ்ணகிரி , தர்மபுரி , சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை கடிதம் […]
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 40,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. நேற்று கர்நாடக அணையில் இருந்து தமிழக காவேரி ஆற்றிற்கு 11,280 கன அடியாக நீர் திறக்கப்பட்ட இருந்து. இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கபினி அணையில் இருந்து இன்று 40,000 கனஅடி […]
மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக எஸ்.மசூத் உசேன் பதவி வகித்து வந்தார்.மசூத் உசேனின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில்,ஆணையத்தின் தலைவர் மசூத் உசென் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.அதில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.2 டி.எம்.சி. காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்போம். கர்நாடகாவில் போதிய நீர் இருக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.