தெலுங்கானா : கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள காகஸ்நகர் மண்டலத்தில் உள்ள அந்தேவெல்லி என்ற இடத்தில் பெத்தவாகு ஆற்றங்கரையில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் ஆண்டவெல்லியில் உள்ள நூற்றுக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கால்நடைகளை இழுத்து சென்றது, இருந்தாலும் கால்நடைகள் பாதுகாப்பாக கரைக்கு ஒதுங்கியது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், ஆற்றை கடக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏராளமான கால்நடைகள் ஆற்றில் […]
சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூன்று நாளில் பெற்று […]
மதுரை அருகே பசுமாடு சத்தம் போட்டதால் மாட்டின் உரிமையாளர் பயங்கரமாக மாட்டை தாக்கியுள்ளார். மதுரை மாவட்டம் ஜெயந்திநகரை சேர்ந்தவர் முத்துக்கணி இவர் தனது வீட்டில் 10 பசுமாடுகள் வளர்த்து வருகிறார், மேலும் நேற்று தனது வீட்டிற்கு வெளியே ஒரு பசுமாடு மட்டும் நீண்ட நேரமாக கத்திக்கொண்டுள்ளது, இதனால் கோபமடைந்த பசுமாடு உரிமையாளர் முத்துக்கணி வேகமாக சென்று கீழே இருந்த கட்டையை எடுத்து பசுமாட்டை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பசுமாடு வலியால் தவித்து வலி தாங்கமுடியாமல் மயங்கி […]