பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி, அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் என கமலஹாசன் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பன்முக திறமைகொண்ட கலைஞனும், ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படுபவருமாகிய கமலஹாசன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் கடந்த 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கமல் தனது டுவிட்டர் […]