சென்னை: தமிழக சட்டப்பேரவை யில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். தனித்தீர்மான உரையில் அவர் கூறுகையில், மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என மேம்போக்காக கூறப்பட்டாலும், சட்டப்படி, அதனையும் மத்திய அரசு தா மேற்கொள்ள வேண்டும். சாதிவாரி முழு விவரங்கள் தொடர்பான தரவுகளை விரிவாக மாநில அரசால் மேற்கொள்ள இயலாது. பொதுவெளியில் சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. […]
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த வியாழன் அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வந்தனர். அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழக சட்டப்பேரவையில், முன்னதாக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு நிறைவேற்றப்பட்டு இருந்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்தில் சாதிவாரி கனக்கடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார். அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் அதிகமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை அந்நாட்டு மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் விட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல்… வாக்காளர்களுக்கு துரோகம்.! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.! அதேபோல, மற்ற மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் […]
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தற்போது இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் முக்கிய பிரச்சாரமாக முன்வைத்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் கூறாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். அதனை சட்டப்பேரவையில் அண்மையில் வெளியிட்டும் விட்டார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட […]
Caste Census: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உடனடியாக கலந்தாய்வைத் தொடங்கி கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பாரதிய ஜனதா எதிரி அல்ல, அதேநேரத்தில் அது குறித்து விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மக்களிடையே சாதி வேறுபாட்டை அதிகரிக்கச் […]
சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுகியிருந்தார். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாமக சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னை தி.நகரில் […]