கடந்த 30-ஆம் தேதி நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்துள்ளது. மேலும், அந்த இளைஞர்கள் வைத்திருந்த ஏடிஎம் கார்டை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வடு […]