தமிழகத்தில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இதற்கிடையில்,பாடநூல் கழக தலைவராக ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் […]