சென்னை : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சாதி வன்முறைகளை தடுப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதிபதி […]
கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ, சாதி ரீதியிலான அடையாளங்களோ இருக்கக்கூடாது மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக்கூடாது எனவும் கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதுபோன்று கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் […]
ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா கட்டாரியா சாதி குறித்து அவதூறு பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை வந்தனா கட்டாரியா,தற்போது ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடினார். தகுதி: அதன்படி, முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து கோல்கள் அடித்து,ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் என்ற பெருமையை வந்தனா பெற்றுள்ளார்.மேலும்,இப்போட்டியில் […]
சாதி, மத மோதல்களை தவிர்க்க தமிழகத்தில் சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என முதல்வரிடம் அமைச்சர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சாதி, மத மோதல்களை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட முயல்வோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், […]
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் தலித் மக்களின் வழித்தடப் பாதையை மறித்து ஆளும்கட்சி பிரமுகர் கம்பி வேலி அமைத்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி அலகுமலை கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து திடீரென கம்பி வேலி அமைத்தனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் […]
ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் சிலரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதை ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ’தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு! சாதிவெறி’என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு!!#சாதிவெறி https://t.co/c1MAONuwKN — pa.ranjith […]