மும்பையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைங்களை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷபீர் மற்றும் சானியா கான் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர். போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர். தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர். தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..! சம்பவம் குறித்து தம்பதியின் […]
மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னாள் கிராம சுகாதார சேவை இயக்குநர் இன்பசேகரன், மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக் […]
சட்டவிரோதமாக மதுபானக் விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை. சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அதிலும், விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக தான் காணப்படும். இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த […]
கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. நேற்று நெல்லையில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் 250-வது நினைவு நாளையொட்டி ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலையணிவித்து மரியாதையை செலுத்தினர். சாலை மார்க்கமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் மாலை அணிவித்த நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை […]
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா மற்றும் 6 உயரதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையே சமீப நாட்களாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினை கடந்த 26-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த மக்களும், காவல்துறையினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் அசாம் காவல்துறையினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உள்துறை அமைச்சர் அவர்கள் இரு மாநில முதல்வர்களிடமும் […]
ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனி நாடாக சித்தரித்து டுவிட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை தனி நாடாக அதில் காட்டியிருந்த இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தவறான வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. […]
போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு. சேலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், அபராதம் செலுத்திய நபர், அவரது நண்பரும், இந்து முன்னணியின் சூரமங்கள ஒன்றிய செயலாளருமான செல்லப்பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த செல்லபாண்டியன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வசூல் செய்த பணத்தை […]
மத்திய அரசு கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது. நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது வழக்குப்பதிவு. லட்சதீவில் சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. லட்சத்தீவு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இதன் நிர்வாகத் தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான நிர்வாகம் ஒரு விதத்தில் மக்களுக்கு எதிரான பல்வேறு சட்ட திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடை, மதுபானத்திற்கான தடை […]
விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக, பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இன்றைய நாகரீகமான உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிகள், கல்வி சார்ந்த வளர்ச்சிகள் என பல்வேறு துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், எவ்வளவு முன்னேற்றங்கள் இருந்தாலும், பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் ஒருபுறம் அரங்கேறி தான் வருகிறது. அந்த வகையில், இன்றும் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான பல கொடுமைகள் பல இடங்களில் அரங்கேறி […]
கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலி. கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் சாலையோர கடையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்தவர் ஷர்பத் காட்டேவில் வசிக்கும் பிரசாந்த் என பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை […]
அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி தொகுதியில், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமமுக சார்பில் டி.டி.வி தினகரனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அமமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அமைச்சர் கடம்பூர் ராஜு அந்த வழியாக வந்தபோது அமமுகவினர் திடீரென அமைச்சர் […]
அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக சார்பில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் கடந்த திங்கட்கிழமை வேட்புமனு செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனவை தாக்கல் செய்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அதிக அளவிலான கூட்டத்தை அழைத்துக் […]
டெல்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில், தீப் சிந்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு. தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பஞ்சாப் நடிகரான தீப் சிந்து அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் இவர்களை விவசாய சங்கத்தினர் தங்கள் பக்கம் […]
தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 1330 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜகவினர் சார்பில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தடையை மீறி பல மாவட்டங்களில் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி இந்த […]
பாலமுருகன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது. சென்னை அருகே உள்ள தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், அருணகிரி நாதர் தெருவில் பாலமுருகன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி, அவரது கடைக்கு வெள்ளை நிற சட்டை அணிந்த டிப்டாப்-ஆக இளைஞர் ஒருவர் வந்தார். அவர் பலமுருகனிடம், ‘நீங்கள் தீபாவளி பட்டாசு கடையை உரிமை இல்லாமல் நடத்தி வருகிறீர்கள். அதனால் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும். இல்லையென்றால் […]
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசியல் பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
மதுரை பட்டாசு ஆலை வெடி விபத் தில், பட்டாசு ஆலை மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், காட்டுப்பகுதியில் பட்டாசு அலை இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வருகிற நிலையில், பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் […]
தமிழக காவல்துறையை பாராட்டி எம்.பி.கனிமொழி ட்வீட். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் பட்டியல் இன வகுப்பை சேர்ந்தவர். இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், பால்ராஜின் ஆடுகள் அருகிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவசங்கு என்பவருக்கு சொந்தமான ஆட்டு பட்டிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. சிவசங்கு தனது பட்டிக்குள் ஆடு புகுந்ததால், அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை தாக்கி, அவரை காலில் விழச் […]
பட்டியலினத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்த ஆதிக்க சாதியினர். கடந்த சில காலங்களாக பட்டியலினத்தவர்களுக்கு எதிரான, உயர் சாதியினரின் ஆதிக்க செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் பட்டியல் இன வகுப்பை சேர்ந்தவர். இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், பால்ராஜின் ஆடுகள் அருகிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவசங்கு என்பவருக்கு சொந்தமான […]
நேற்று தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலால் காரணமாக கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தடையை மீறி, திருவள்ளூர் மாவட்டம், புதுசாத்திரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், தடையை மீறி மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், ஸ்டாலின் அவர்கள் கொரோனா பரவல் ஏற்படும் சூழலை உருவாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.