கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் பாபு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும். வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய 7 மாணவர்களின் வழக்கு தள்ளுபடி. புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய ஏழு மாணவர்களின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.