கொரோனா வைரஸ் பாதிப்பு காரணாமாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான சில வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2 பேரை காவுவாங்கி உள்ளது.மத்திய,மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஹோலி பண்டிகை விடுமுறையானது முடிந்து திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் உச்சநீதிமன்ற அலுவல் பணிகள் தொடங்க உள்ளது.அதன்படி விசாரணைக்கான வழக்குகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உச்சநீதிமன்றத்திலும் பல கட்டுப்பாடுகள் […]
கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.இதனையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது. பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா .பின் கர்நாடக பேரவையில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் 105 […]