அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். பின்னர் கண்ணன் மோசடியில் ஈடுபட்டதாக 9 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். […]