மேற்கு வங்க மாநில அமைச்சராக இருந்த சுப்ரதா சாஹா மாரடைப்பால் காலமானார். மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா (வயது 72) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். கடுமையான நெஞ்சுவலி காரணமாக இன்று காலை முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுப்ரதா சாஹா, 2011, […]