இதுவரை 27 மாநிலங்களுக்கு ரூ.9,879.61 கோடி மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன.கடந்த அக்டோபர் மாதம் இந்தத் திட்டத்தை தற்சார்பு இந்தியா நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்றால் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநிலங்களின் மூலதன செலவினங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்கு […]