திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். – வியாபாரிகள் கூட்டமைப்பினர். அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் அதிமுகவின் இந்த முடிவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. […]