ஹரியானாவில் கஞ்சா விற்பனை செய்த இருவரிடமிருந்து 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள நஜாப்கர் எனும் இடத்தை சேர்ந்த ஹரேந்தர்என்பவரும் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் எனும் மாவட்டத்திலுள்ள பஹதூர்கர் எனும் இடத்தைச் சேர்ந்த பூபிந்தர் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவர் கடந்த ஒரு வருடமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை பிடித்து விசாரித்தபோது ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து ஹரியானாவுக்கு கஞ்சாவை […]
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் இருந்து கல்லூரி மாணவர்களை விரைவில் வெளிக்கொண்டு வருவோம். சென்னையில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.