தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு வந்தன. அப்போது தான் கஞ்சா செடி வளர்க்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது, தொழில்துறை பயன்பாடு, மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக கஞ்சா செடி வளர்த்து கொள்ளலாம் என்று மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, சவுத்ரி சர்வான் […]