சென்னை மாநகராட்சியில் திருமண கோலத்தில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலின் போது சில வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலை வித்தியாசமான முறையில் தாக்கல் செய்வார்கள். இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 162 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் […]
திருச்சி மாநகராட்சிஇல போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் சட்டையில் பட்டை நாமத்துடன் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் கோடம்பாக்கம் 136-வது வார்டு கவுன்சிலர் பதவியில் போட்டியிட 22 வயது இளம்பெண் நிலவரசி துரைராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், புதிய வங்கி கணக்குகளை தொடங்க வேட்பாளர்கள் திண்டாட்டம். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்க கடந்த 28-ஆம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வேகமாக தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவோடு புதிய வங்கி கணக்கிற்கான பாஸ்புக் கேட்கப்படுவதால் வேட்பாளர்கள் […]
தேனி:ஆண்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள்,8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் […]
நாகை நகராட்சி அதிமுக பெண் வேட்பாளர் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் அந்த பெண் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அதிமுக சார்பில் அமிர்தவள்ளி( 33) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்க நாகை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவருடைய பெயர் […]
நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட பிரபல கானா பாடகர் கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக அதே வார்டில் போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. […]