விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஏற்கனவே கூறிய கருத்துக்கு இந்தியா எச்சரிப்பு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதியான போராட்டங்களுக்கு தன் எப்பொழுதுமே துணை நிற்பேன் என கருத்து தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், வெளிநாட்டிலிருந்து ஆதரித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா பிரதமர் […]
கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.இந்தியா முழுவதும் 33,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கொரோனா நிலவரம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் பிரதமர் நரேந்திர […]
கனட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் அடுத்த மாதம் 21 -ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் கனடாவின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டு கவர்னர் ஜெனரலான ஜூலி பயட்டே (Julie Payette) -வை நேரில் சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரை செய்தார். இதற்கு பின்னர் கவர்னர் ஜெனரல் ஜூலி பயட்டே (Julie Payette) நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.