ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் “தாக்குதல் ஆயுதத்துடன்” நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது துப்பாக்கி சூடு நடுநிலைப்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.