கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே, பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் இன்று என்பதால் வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். “I LOVE Wayanad” என்று அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற டிசர்ட் அணிந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது அவரை பார்த்த ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர். […]
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதித்து வழிகாட்டு வெளியீடு. காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்.17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே […]
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியான பாஜகவுக்கான பிரசாரத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் உரையாற்றுகிறார். உத்தரபிரதேசம், பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வரும் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து பரப்புரை மேற்கொள்கிறார். வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 23-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், நேற்று இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில […]
நாளை முதல் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், […]
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. அதிமுக – திமுக இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், […]
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பா.ஜ.க வெற்றி பெற்றால் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று சசாரம், கயா மற்றும் பாகல்பூரில் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார். சசாரத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில் பியாடா மைதானத்தில் விறுவிறுப்பாக […]
பிரசாரத்தின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் மர்ம நபர் தாக்கியுள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் திறந்த வாகனம் ஆகும்.அப்போது பிரசார கூட்டத்தில் இருந்த ஒருவர் திறந்த வாகனத்தின் மீது ஏறி கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அந்த நபரை காவல்த்துறை […]