சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்.!

சென்னையில் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு 5.0 உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு, சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் ஓட தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, மினி கார் அடிப்படை கட்டணத்தை 3 கி.மீ. ரூ.100-ஆகவும், கூடுதல் கி.மீ ஒன்றுக்கு ரூ.14-ஆகவும், SUV அடிப்படை கட்டணம் ரூ.150-ஆகவும், கூடுதல் கி.மீ.ஒன்றுக்கு ரூ.18 நிர்ணயிக்க அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.