சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு காரணம் காற்று தான், பலத்த காற்று காரணமாக தீ பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், தீயை அணைக்கும் பணியில் தொய்வு விழுந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் எரிந்து வரும் காட்டுத்தீ பகுதிகள் உட்பட […]
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. சொல்லப்போனால், அமெரிக்காவின் முக்கிய தலைகள் தங்கியிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சாம்பலாகி வருகிறது. லாஸ்ஏஞ்செல்சில் பற்றி எரிந்து வரும் தீக்கு நேற்று வரை 16 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் மேலும் 8 பேர் உடல் கருகி பலியாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் பலர் காணவில்லை என்றும் அந்தத் […]