சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனர் ராஜா முத்தையா சிலையின் தலையின் மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனராகிய ராஜா முத்தையா செட்டியார் அவர்களின் முழு உருவச்சிலை இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிலையின் தலையின் மேல் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் சிலர் தங்களுடன் பயிலக்கூடிய […]