தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம் என கமல்ஹாசன் கருத்து. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வருகிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே, உத்தரபிரதேசம், […]